லேக்கனாமிர்தம் இரண்டு

 

லேக்கனாமிர்தம் இரண்டு  / வைகாசி 23 (5-6-2024)

இன்று தேதி என்ன என்றால் என்ன சொல்வீர்கள்?


எஸ்.எஸ். மகாதேவன்


இன்று என்ன  தேதி என்று கேட்டால் ஜூன் 5 என்று பதில் வரும். உண்மையில் இன்று வைகாசி 23.

எல்லோரும் சுதேசி மாதம், தேதி சொல்லிப் பழகினால் நம் வாழ்க்கையிலிருந்து காலனி ஆதிக்க மிச்சசொச்சங்கள் மாயமாகி விடும்.

இன்றைக்கு நான் தேதி பற்றி பேசுவது வேறு விஷயமாக. இந்த ஆண்டு (2024) ஜூன் 5 அன்று ஹிந்து கால கணக்கீட்டின்படி வைகாசி 23. இது போல 47 ஆண்டுகளுக்கு முன் (1977) ஜூன் 5 அன்று வைகாசி 23 அன்று தான் என் திருமணம் நடந்தது



2023  திருமண நாளில்  
வசந்தா  *  மகாதேவன்

“தியாகபூமி உதவி ஆசிரியர் மகாதேவன் திருமணம் வீட்டில் தான் நடந்தது. கூச்சல் ஆரவாரம் இல்லை. விஷ்ணு சகஸ்ரநாமம் ஒலிப்பேழையில் (கேசட்) ஒலித்துக் கொண்டிருந்தது. கல்யாணத்துக்கு வந்திருந்தவர்கள் இருதரப்பிலும் பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள் மட்டுமே. அவர்களும் கல்யாண வைபவத்தின் பல்வேறு சடங்குகளை ஆர்வத்துடன் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள். மணப்பெண்ணுக்கு பருத்திப் புடவை; மணமகனுக்கு சரிகை இல்லாத வேட்டி. கல்யாண விருந்தில் ஒரே ஒரு இனிப்பு. மற்றபடி அன்றாட சாப்பாடு. அதையும் அனைவருமாக வீணாக்காமல் பரிமாறினார்கள், பசியாறினார்கள். இருவீட்டாரும் திருமணத்தை எளிமையாக நடத்துவது என்று தீர்மானம் செய்திருந்தார்கள்; அது போல செய்தார்கள்”.

இது அடுத்த வார தியாகபூமியில் என் திருமணம் பற்றி வெளியான செய்தி. அனுப்பிய நிருபர் யார் தெரியுமா? பின்னாளில் அவர் தமிழ்நாடே அறிந்தவர் ஆனார். அன்றைய தமிழக ஆர். எஸ். எஸ் இணை அமைப்பாளர் அமரர் இராம கோபாலன்தான்.


இராம. கோபாலன்


திருமணம் நடந்த விதம் இப்படி செய்தி ஆனது போல் திருமண விருந்தினரில் ஒருவரின் அனுபவமும் செய்தியாகிற தகுதி உள்ளது. முகூர்த்தம் ஆனதும் சாப்பிட்டுவிட்டு புறப்பட்ட அந்த கஸ்டம்ஸ் துணை கலெக்டர், சாலையில் தன் மேலதிகாரியை (கலெக்டரை) சந்தித்தார். தமிழ் குடும்பங்களில் திருமண வியம் பற்றி உரையாடல் நடந்தது. சிக்கனமாக நடந்த திருமணம் என்று கேள்விப்பட்டதும் கஸ்டம்ஸ் கலெக்டர், “திருமண வீட்டுக்காரர்களில் யாராவது ஆர்.எஸ்.எஸ்ஸா?” என்று கேட்டார். ஆமாம் என்று சொன்னதும் வைத்ய என்ற அந்த கலெக்டர்அதுதானே கேட்டேன், இப்போதுதான் புரிகிறது என்றார்.

இந்த 100 ஆண்டுகளில் சங்கம் பற்றிய ஞாபகம் ஒவ்வொருவர் மனதில் ஒவ்வொரு விதமாக பதிந்திருக்கிறது. சென்னை ஏ.எம். ஜெயின் கல்லூரி பேராசிரியர் ஒருவர் ஆர்.எஸ்.எஸ்ஸா? தக்ஷா. ஆரமா என்பார்களே அதுதானே?” என்று கேட்டார். முதிய துறவி ஒருவர் தன் சிறுவயது ஷாகா அனுபவத்தால் இப்போதும் அந்த உத்திஷ்ட, உபவிஷ உண்டா?” என்று கேட்டார். நிக்கர் ங்க சீருடையாக இருந்தபோது தேவாஸ் என்ற மத்தியப் பிரதே நகரில் ரிக்ஷாக்காரர் ஒருவர் ஆர். எஸ். எஸ்ஸா, அந்த நிக்கர்வாலா சங்கம் தானே?” என்று அடையாளம் காட்டினார்.

குஜராத்தில் பூகம்பம் வந்தபோது ஸ்வயம்சேவகர்கள் செய்த நிவாரணப் பணி அபாரம். ஆர்மியை விட்டால் ஆர் எஸ் எஸ் தான் ங்கே” -- ஆமதாபாத் வாசியான ஒரு பத்திரிகையாளர் சொன்னது இது. சங்க பெரியவர் ஒருவர் சங்கத்தை பற்றி மிகச் சிறந்த வர்னை என்று இதைக் குறிப்பிட்டார்.


                                              ஸ்ரீ குருஜி   *  டாக்டர் ஹெட்கேவார்


1925 ல் சங்கத்தை நிறுவிய டாக்டர் ஹெட்கேவார் நடத்திய முதல் ஷாகாவிற்கு வந்து கொண்டிருந் பேராசிரியர் சாவலாபூர்கர் பின்னாளில் சென்னை வந்திருந்தபோது அவரை சந்திக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. “டாக்டர் சாஹப் வாழ்ந்த காலத்தில் நான் வாழ்ந்தேன் என்பது என் பேறு”. இது வியபாரதத்திற்காக அவரை நான் பேட்டி கண்டபோது அவர் கூறியது. ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் என்ற பெயர் அவர் உபயம்.

ஸ்ரீ குருஜி (எம்.எஸ். கோல்வல்கர்) யை மூன்று முறை சங்க நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கிறன். (போன ஆண்டு தி நகர் ஐடி மிலனில் “குருஜியைப் பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்டார் ஒரு இளைஞர்!). எழும்பூர் ரயில் நிலையத்தில் குருஜியை வழியனுப்ப வந்திருந்த சங்க பெரியவர் ஒருவர் இவர்தான் மகாதேவன்; தியாகபூமி ஆசிரியர் என்றார் என்னைக் காட்டி. உடனே ஸ்ரீ குருஜிகடந்த அரை நூற்றாண்டில் எனக்கு ஐந்து மகாதேவன்கள் பழக்கம்” என்று சொல்லி ஒவ்வொருவர் பற்றியும் சிறு குறிப்பும் தந்தார். வேறு ஒரு சந்தர்ப்பத்தில்அவருடைய நினைவாற்றலை புகழ்ந்தவரை நிறுத்தி, “மனிதர்களுடன் பழகுவதுதான் என் வேலையே” என்றார் ஸ்ரீ குருஜி. பலசரக்கு (மளிகை) கடையில் பல நூறு ண்டங்களின் இடங்களையும் விலைகளையும் கடைக்காரர் சகஜமாக ஞாபகம் வைத்திருப்பது போல என்று உதாரணமும் சொன்னார்.

நல்ல வேளை, என் திருமணம் நடந்த தேதி எனக்கு ஞாபகமிருக்கிறது.

போன ஆண்டு திருமணத் தேதியன்று என் மனைவியும் நானுமாக ஆரம்பித்த “தம்பதி திருப்பணிபற்றி ஞாபகம் வருகிறது. அது தொடர்ந்து நடக்கிறது. அது பற்றி அடுத்த பதிவில் விவரிக்கிறேன்.


----------------------------------------------------

என்னைப் பற்றி...

v தியாகபூமி, விவேகானந்த கேந்திர பத்ரிகா, இந்தியா டுடே - தமிழ், ஹிந்துஸ்தான் சமாச்சார், த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், விஜயபாரதம் ஆகிய பன்மொழி ஊடகங்களில் ஆசிரியத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றேன்.

v ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) தந்த ஊக்கத்தினால் பாரத தரிசனம், பஞ்சாமிர்தம், மழலைக்கு மரபு ஆகிய பண்புப் பதிவு / கருத்துப் பகிர்வு முயற்சிகளில் தோள் கொடுக்கிறேன்.

v  தமிழ்க் கவிதைகள் ஒரு சில படைத்திருக்கிறேன்.

v தேசிய ஒருமைப்பாடு, ஹிந்து ஒற்றுமை ஆகிய கருத்துக்கள் கொண்ட ஹிந்தி, ஆங்கில கட்டுரைகளை தமிழாக்கம் செய்கிறேன்.

v உரையாடல் உத்தி வழியே ஹிந்தி மொழி  / தமிழ் மொழி அறிமுகம் செய்யும்  முயற்சி செய்திருக்கிறேன்.

v எப்போதோ மஞ்சரிக்கும் எப்போதாவது அமுதசுரபிக்கும் எழுதுகிறேன்.

v ற்போது விஜயபாரதம், பாஞ்சஜன்ய, ஆர்கனைசர், விக்ரமா உள்ளிட்ட சங்க இதழ்களில் எழுதி வருகிறேன்.

சமீப காலமாக... 

'சொல்துணை' கலாச்சார  க்விஸ் வரிசையை Mahadevan Sankaranarayanan என்ற என் முகநூல் பதிவுகளாக வழங்கிவருகிறேன்.

Comments

Post a Comment

Popular posts from this blog

லேக்கனாமிர்தம் 4

லேக்கனாமிர்தம் 6