லேக்கனாமிர்தம் 4
ஊர் காணாத தேர் பவனி “ தாத்தா , உங்க வாழ்க்கைய பத்தி சொல்லுங்க ளேன்” என்று எட்டாம் வகுப்பு படிக்கும் என் பே த்தி கேட்டா ள். அதற்கென்ன , தோ சொல்றேன் என்று தொண்டையைக் கனைத்துக் கொண்டேன் . பே த்தி கேட்டது பே ட்டி என்று நினைத்து விட்டேன் . “ நீங்க செஞ்சதை எல்லாம் வருஷ வாரியா சொல்லுங்க போதும் . 'உன் குடும்பத்தில் உள்ள மிக மூத்தவரின் வாழ்க்கை யை டைம் லைன் ஆக எழுதிக் கொண்டு வா' என்று வீட்டுப்பாடம் கொடுத்திருக்கிறார் கள்” எ ன்று என் பேத்தி வி ளக்கவே , வருஷங்களை ஞாபகப்படுத் திக் கொள்ள மூளையை க் குடைந்து கொள்ளலா னேன். பி றந்த ஆண்டு (1945), மூன்றாம் வருட ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முடித்த ஆண்டு (1971), திருமணம் நடந்த ஆண்டு (1977), எ ன்று இவற்றை மையமிட்டு மற்ற நிகழ்வுகளை பட்டியலிட்டேன் . கு றி த்துக்கொண்ட பேத்தி குதித்தோடி னா ள் . பொதிகையில் 'எந்தையும் தாயும்' வழங்கும் மகாதேவன் பே த்தி யைப் போல பழைய நினைவுகளை கிளற ஒரு வாய்ப்பு அளித்தது தொலைக்காட்சி . இன்றைய ‘ டி டி தமிழ் ’ தொலைக்காட்சி ‘ பொதிகை ’ யாக இருந்த போது 2017 ல் ‘ எந்தையும் தாயும் ’ என...