Posts

Showing posts from June, 2024

லேக்கனாமிர்தம் 3

Image
தம்பதியாக திருப்பணி செய்யும் நமது இந்த  சகோதர சகோதரிகளை வாழ்த்துவோமா ? பாரத சமுதாயத்தில் குடும்பம் தான் அடிப்படை அ ல கு (basic unit). குடும்பத்துக்கு அடிப்படை அல்லது வேர் திருமணம் . நமது நாட்டில் தேசம் , தெய்வம் , தர்மத்தைக் காக்க கணவனும் மனைவியும் இணை ந்து பணி புரிய வேண்டும் என்பதுதான் திருமணத்தின் நோக்கமே . இந்த நோக்கத்தை வாழ்ந்து காட்டக்கூடியவர்கள் உ ண்டா ? தேடினால் கிடைக்கிறார்கள் . அப்படி நான் தேடியதில் கிடை த்த ஐந்து தம்பதிகளை இந்த ‘ லே க் க னா மிர்தம் ’ இடுகை அறிமுகப்படுத்துகிறது . ‘த ம்பதி திருப்பணி ’ என்ற தலைப்பிட்டு முகநூ லி ல் mahadevan sankaranarayanan என்ற முகவரியில் வரிசையாக எழுதி வந்தேன் . அதிலிருந்து ஐந்து தம்பதிகளை இதோ சந்தியுங்கள் .    டி.கே. ஹரி, ஹேமா வேதம், சமஸ்கிருதம், ஆயுர்வேதம், யோகா … என உலகை உயர்த்தும் பாரத ஞானக் கருவூலத்தை நாடி வரும் உலகம், கருவூலத்தின் சாவி யாரிடம் இருக்கிறது என்று தேடினால் சென்னை தம்பதி டி கே ஹரி - ஹேமா இதோ எங்களிடம் இருக்கிறது என்பார்கள். 20 ஆண்டுகள் வரை ஐ டி துறையில் பணிபுரிந்து விட்டு உலகின் பல கலாச்சாரங்களையும் கண்டப...

லேக்கனாமிர்தம் இரண்டு

Image
  லேக்கனா மிர்தம் இரண்டு   / வைகாசி 23 (5-6-2024) இன்று  தே தி என்ன என்றால்  என்ன சொல்வீர்கள் ? எஸ்.எஸ். மகாதேவன் இன்று என்ன   தேதி என்று கேட்டால் ஜூன் 5 என்று பதில் வரும் . உண்மையில் இன்று வைகாசி 23. எல்லோரும் சுதேசி மாதம், தேதி சொல்லிப் பழகினால் நம் வாழ்க்கையிலிருந்து காலனி ஆதிக்க மிச்சசொச்சங்கள் மாயமாகி விடும் . இன்றைக்கு நான் தேதி பற்றி பேசுவது வேறு விஷயமாக . இந்த ஆண்டு (2024) ஜூன் 5 அன்று ஹிந்து கால கணக்கீட்டின்படி வைகாசி 23 . இது போல 47 ஆண்டுகளுக்கு முன் (1977) ஜூன் 5 அன்று வைகாசி 23 அன்று தான் என் திருமணம் நடந்தது .  2023  திருமண நாளில்    வசந்தா  *  மகாதேவன் “தியாகபூமி உதவி ஆசிரியர் மகாதேவன் திரு மணம் வீட்டில் தான் நடந்தது . கூச்சல் ஆரவாரம் இல்லை. விஷ்ணு சகஸ்ரநாமம் ஒலிப்பேழையில் ( கேசட் ) ஒலித்துக் கொண்டிருந்தது . கல்யாணத்துக்கு வந்திருந்தவர்கள் இருதரப்பிலும் பெற்றோர்கள் , உடன் பிறந்தவர்கள் மட்டுமே . அவர்களும் கல்யாண வைபவத்தின் பல்வேறு சடங்குகளை ஆர்வத்துடன் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள் . மணப்பெண்ணுக்க...